விளையாட்டு

சாய்னாவுக்கு அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்றுடன் வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நெவால், வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டார். போட்டியின் போது வீக்கம் ஏற்பட்டதால் தன்னால் இயல் பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் சாய்னா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனு மதிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்ட அவருக்கு நேற்று முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். இதனால் அடுத்த 4 மாதங்களுக்கு சாய்னா நெவால் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவரது தந்தை ஹர்வீர் சிங் தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சை நடை பெற்றதால் சிந்து பங்கேற்று விளையாடிய இறுதி போட்டியை பார்க்க முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித் தார்.

SCROLL FOR NEXT