ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக பாகிஸ் தான் அணி கேப்டன் அசார் அலி மீது ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் அசார் அலிக்கு ஒரு ஆட்டத் தில் விளையாட தடை விதிக்கப்பட் டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் அசார் அலி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடையுடன் அசார் அலிக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமும், சக அணி வீரர்களுக்கு 20 சதவீத அபராதமும் விதித்து மேட்ச் ரெப்ரி ஜெப் குரோவ் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக வீசியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் நியூஸி லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலும் அசார் அலி இதே சர்ச்சையில் சிக்கினார். ஒரே வருடத்துக்குள் மீண்டும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் தடையை சந்தித்துள் ளார் அசார் அலி. ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை பாகிஸ்தான் அணி 1-4 என பறிகொடுத்தது.