விளையாட்டு

மீண்டும் டென்னிஸுக்கு வரமாட்டேன்: லீ நா

செய்திப்பிரிவு

சர்வதேச டென்னிஸில் உச்சத்தில் இருந்த சீன வீராங்கனை லீ நா, கடந்த மாதம் திடீரென ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

டென்னிஸுக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை. டென்னிஸ் விளையாடியபோது எனது குடும்பத்தினருடன் செலவிட முடியாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை இப்போது ஈடுகட்டிக் கொண்டிருக்கிறேன்.

அதனால் நிச்சயம் மீண்டும் டென்னிஸுக்கு வரமாட்டேன். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நான் 33 வயதை எட்டிவிடுவேன். எனது குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்றார். -பிடிஐ

SCROLL FOR NEXT