உலக செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்ற நார்வே நாட்டு வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பரிசு வழங்குகிறார்.
உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் நவம்பர் 9- ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் 10-வது சுற்றுகளின் முடிவில் 6.5 - 3.5 என்ற புள்ளிகள் கணக்கில் கார்ல்சன், நடப்புச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.8 கோடியே 40 லட்சமும், இரண்டாவது இடத்தைப் பிடித்த விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.5 கோடியே 60 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மதியம் 12.15 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பரிசுகளை வழங்குகிறார்.