போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கவுள்ள நிலையில் டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
மே.இ.தீவுகள் அணியில் கடந்த போட்டியில் வளரும் வேகப்பந்து வீச்சாளருக்கான அனைத்து சுவடுகளையும் விட்டுச் சென்ற அல்சாரி ஜோசப்புக்குப் பதிலாக ரன் வழங்கும் தேவேந்திர பிஷூ சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை அல்சாரி ஜோசப் காயமடைந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
இந்திய அணியில் ஷிகர் தவண் நீக்கப்பட்டுள்ளார், அவருக்குப் பதிலாக முரளி விஜய்யும், ஜடேஜாவுக்குப் பதிலாக செடேஸ்வர் புஜாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணி வருமாறு: விஜய், ராகுல், விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, புஜாரா, அஸ்வின், சஹா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, இசாந்த் சர்மா.