விளையாட்டு

ரியோ ஒலிம்பிக்: அமெரிக்காவுக்கு முதல் தங்கம்

ஏஎஃப்பி

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது அமெரிக்கா.

10மீ ஏர் ரைபிள் - துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் அமெரிக்க இளம் வீராங்கனை வர்ஜினியா திராஷர் முதல் தங்கம் வென்று பெருமை சேர்த்தார்.

சீனாவின் டூ லி என்ற வீராங்கனையை வீழ்த்தினார் வர்ஜினியா திராஷர். அதாவது 208 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் திராஷர்.

சீனாவின் டூ லியிற்கு 207 புள்ளிகளுக்காக வெள்ளியும், சீனாவின் மற்றொரு வீராங்கனை யீ சைலிங் வெண்கலமும் வென்றனர்.

SCROLL FOR NEXT