கஜகஸ்தானில் அல்மாட்டி நகரில் ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய தரப்பில் டூட்டி சந்த் கலந்து கொண்டார்.
பந்தய தூரத்தை 11.32 விநாடிகளில் கடந்தால் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என்ற நிலையில் டூட்டி சந்த் 11.30 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து அசத்தினார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.
இந்த பிரிவில் கடைசியாக 1980-ல் பி.டி.உஷா இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றி ருந்தார். சுமார் 36 வருடங்களுக்கு பிறகு தற்போது டூட்டி சந்த் கலந்து கொள்கிறார்.
டூட்டி சந்த் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற பெடரேசன் கோப்பை தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 11.32 விநாடிகளில் கடந்து ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டிருந்தார். ஆனால் தற்போது சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
‘‘இந்த
தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு கடினமானதாக இருந்தது.
டூட்டி சந்த் தைவான் தடகள போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ள டூட்டி சந்த் கூறும்போது,
எனது கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல் படுவேன்’’ என்றார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டூட்டி சந்த், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஸ்டீராய்டு ஹார்மோனை உட்கொண்டதாகக் கூறி, 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இது தொடர்பான வழக்கின் முடிவில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.