விளையாட்டு

வார்ம்-அப் ஆட்டத்தை வைத்து இங்கிலாந்தை முடிவு கட்டாதீர்கள்: பாகிஸ்தான் அணிக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை

பிடிஐ

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி எனும் சோதனையை எதிர்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி டூர் கேம்களின் சாதகபாதகங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் டெஸ்ட் எனும் உண்மையான சவாலுக்குத் தயாராக வேண்டுமென்று பாகிஸ்தான் வீரர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.

“டூர் கேம்களின் முடிவுகளை பாகிஸ்தான் சீரியசாக எடுத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிக்கான அளவு கோலாக அதனை எடுத்துக் கொண்டால் அது மிகப்பெரிய தவறாகிவிடும். இங்கிலாந்தில் எப்போதும் பயணிக்கும் அணிகளுக்கு மென்மையான டூர் கேம்களையும், பிட்ச்களையும் வழங்குவது வழக்கம்.

டூர் கேம்களை நல்ல பயிற்சிக் களமாகப் பார்க்க வேண்டுமே தவிர அதன் முடிவுகளின் சாதகங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடாது .அணி நிர்வாகம் இந்த டூர் கேம்களின் ஆட்டங்களில் தீவிரமாக எதையும் தேடுதல் கூடாது.

அவர்கள் பந்துகள் ஸ்விங் ஆகும் பிட்ச்களைத் தயாரிப்பாளர்கள் அந்த 11 வீர்ர்கள் கொண்ட அணி டூர் கேம் அணியைக் காட்டிலும் பல வகையில் வித்தியாசமானது.

எனக்கு பாகிஸ்தான் அணியின் பேட்டிங்தான் பிரச்சினையாக உள்ளது, குறிப்பாக மொகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் உத்தி இங்கிலிஷ் பிட்ச்களுக்கு தக்கவாறு இல்லை. அரைகுறை கால்நகர்த்தல் பயனளிக்காது, மேலும் இங்கிலாந்தில் ஆடும்போது நமது ஆஃப் ஸ்டம்ப் குறித்த கவனம் அதீதமாகத் தேவைப்படும்” என்றார் வாசிம் அக்ரம்.

SCROLL FOR NEXT