விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இந்திய ஹாக்கி அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்

செய்திப்பிரிவு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போதைய கேப்டன் சர்தார் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது. ஜப்பானில் நவம்பர் 2 முதல் 10-ம் தேதி வரை ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா தவிர சீனா, ஜப்பான், மலேசியா, ஓமன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி நவம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து ஜப்பான் (நவம்பர் 3), ஓமன் (நவம்பர் 5), பாகிஸ்தான் (நவம்பர் 7), மலேசியா (நவம்பர் 8) ஆகிய நாடுகளை இந்தியா எதிர்கொள்கிறது.

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இப்போது 3-வது ஆட்டமாக நடைபெறவுள்ளது. 2011-ம் ஆண்டு இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டம் வரை முன்னேறி பாகிஸ் தானிடம் தோல்வியடைந்து டிராபி யை கை நழுவவிட்டது. இப்போது 3வது ஆண்டாக களமிறங்குகிறது.

ஆசிய சாம்பியன் டிராபியில் இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். வெளிநாட்டு சூழல்களை உணர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் நரீந்தர் பாத்ரா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT