விளையாட்டு

யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் பேட்டிங் பாணிகளின் கலவையே ரிஷப் பந்த்: சச்சின் டெண்டுல்கர்

இரா.முத்துக்குமார்

ரிஷப் பந்த் பேட்டிங் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் ஆகியோரது கலவையாகத் தெரிகிறது என்று லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ரிஷப் பந்து ஒரு சிறப்பு வாய்ந்த திறனாளி. என்னைப் பொறுத்தவரை அவரது பேட்டிங் யுவராஜ், ரெய்னா அகியோரது பாணிகளின் கலவை என்றே தோன்றுகிறது.

தந்தையை இழந்த துக்கத்துடன் அவர் விளையாட்டில் கவனம் செலுத்துவது என்பது முடியாத காரியம், 1999 உலகக்கோப்பையின் போது எனக்கும் இது நிகழ்ந்தது, எனவே மீண்டும் உடனேயே நாம் நம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது கடினம். ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பிலிருந்து பந்த் மீண்டு வந்துள்ளார்.

ரிஷப் குடும்பத்தினருக்கும் ரிஷப் பந்த்தின் மனவலிமைக்கும் எனது வணக்கங்கள். இப்படிப்பட்ட காலங்களில் குடும்பத்தின் ஆதரவு முக்கியம்.

இவ்வாறு கூறினார் சச்சின்

SCROLL FOR NEXT