விளையாட்டு

அப்ரிதிக்கு காயம்

செய்திப்பிரிவு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பாகிஸ்தானின் அதிரடி ஆல்ரவுண்டரான ஷாகித் அப்ரிதிக்கு தாடையில் காயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி பயிற்சிப் போட்டியில் விளையாடியபோது வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் வீசிய பந்தில் அப்ரிதி ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். அப்போது பேட்டில் பட்டு "எட்ஜ்" ஆன பந்து அவருடைய ஹெல்மட்டில் தாக்கியது. இதனால் அப்ரிதியின் தாடை அருகே காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மொயின் கான் கூறுகையில், "அப்ரிதிக்கு பயப்படும்படியான காயம் இல்லை என்றாலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகமாக பேசக்கூடாது என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். பேசினால் அவருடைய தாடையில் பாதிப்பை ஏற்படும் என்பதால் மருத்துவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்" என்றார்.

SCROLL FOR NEXT