விளையாட்டு

மாநில கூடைப்பந்து: தூத்துக்குடி லசால் பள்ளி தேர்வு

செய்திப்பிரிவு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகளுக்கு இடையேயான பாரதியார் தின மாநில குழுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில கூடைப்பந்துப் போட்டியில் புனித லசால் மேல்நிலைப்பள்ளி அணி வட்டார, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மண்டலப் போட்டிகள் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரையிறுதியில் புனித லசால் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து விளையாடி 72-34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியை 74-46 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனித லசால் மேல்நிலைப்பள்ளி, மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களை புனித லசால் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்சகோதரர் ராபர்ட், தலைமையாசிரியர் பெப்பின் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

SCROLL FOR NEXT