இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதற்கு முன் னோட்டமாக ஈடன் கார்டன் மைதானத்தில் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் மோகன் பகன்- பவானிபூர் அணிகள் இடை யோன ஆட்டம் பகலிரவு ஆட்ட மாக பிங்க் நிற பந்தில் நடத்தப் பட்டது.
முதல் இன்னிங்ஸில் மோகன்பகன் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய பவானிபூர் 153 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
146 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மோகன் பாகன் 88.1 ஓவரில் 349 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 495 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பவானிபூர் அணி இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 48.3 ஓவரில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் மோகன் பாகன் அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் விவேக் சிங் 5, முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.