விளையாட்டு

நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதிய முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது

பிடிஐ

நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

தென் ஆப்பிரிக்கா - நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையி லான முதல் டெஸ்ட் போட்டி டுனிடின் நகரில் நடந்தது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 308 ரன்களையும், நியூஸிலாந்து அணி 341 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 4-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்தது.

டு பிளெஸ்ஸிஸ் 56 ரன்களுடனும் பிலாண்டர் ஒரு ரன்னுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று மழை பெய்ததால் ஒரு பந்துகூட வீசப் படாமல் போட்டி கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இப்போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கார் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி 16-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

ராஸ் டெய்லர் விலகல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பேட்ஸ்மேனான ராஸ் டெய்லர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்ததால் அவர் அணியில் இருந்து விலகியுள்ளதாக நியூஸிலாந்து அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காயம் குணமாவதைப் பொறுத்து, 3-வது டெஸ்ட்டில் ராஸ் டெய்லர் ஆடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT