விளையாட்டு

உலக செஸ் 7-வது சுற்று டிரா: கார்ல்சன் தொடர்ந்து முன்னிலை

செய்திப்பிரிவு

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் - நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 7-வது சுற்று டிராவில் முடிந்தது.

இதனால், 12 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டித் தொடரில், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 7-வது சுற்றில் இன்று 32-வது நகர்த்தலில் இருவரும் ஆட்டத்தை டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். இதனால் இருவருக்கும் தலா அரைப் புள்ளி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கார்ல்சன் 4.5 புள்ளிகளுடன் முன்னிலையிலும், ஆனந்த 2.5 புள்ளிகளுடன் பின்னடைவிலும் உள்ளார்.

இதனால், அடுத்தடுத்த சுற்றுகளில் ஆனந்துக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் சுற்றுகளை கார்ல்சன் சமன் செய்தாலே சாம்பியன் ஆகிவிடும் சூழல் நிலவுகிறது.

இந்தத் தொடரின் 8-வது சுற்று ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT