ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இருந்து நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கப்தில் 61 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் நியூஸலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி நேப்பியரில் நாளை நடைபெறுகிறது.
இதற்கிடையே மார்ட்டின் கப்தி லுக்கு மாற்று வீரராக டீன் பிரவுன்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார்.