ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 4X400 தொடர் ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜூவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 13-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் தருண் அய்யாசாமி தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். தருண் அய்யாசாமியை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:00.91 விநாடிகளில் கடந்தது.
மகளிர் பிரிவு தொடர் ஓட்டத்தில் டின்டு லுகா, பூவம்மா, அனில்டா தாமஸ், நிர்மலா சியோரன் ஆகியாரை கொண்ட இந்திய அணியும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.