விளையாட்டு

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குப் பின்னடைவு: ராகுல் விலகல்

பிடிஐ

தோள்பட்டை காயம் காரணமாக இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 2017 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கெனவே கேப்டன் விராட் கோலி தோள்பட்டைக் காயம் காரணமாக முதல் ஒரு சில போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகியுள்ள நிலையில், ஏ.பி.டிவில்லியர்ஸ் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபார்மில் உள்ள ராகுல் ஆடமுடியாமல் போனது பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மும்பை அதிரடி இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு இம்முறை தன்னை மேலும் ஒரு முறை நிரூபிக்க அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மிட்செல் ஸ்டார்க் இல்லை அவருக்குப் பதிலாக டைமல் மில்ஸ் விளையாடுவார் என்று பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்தார். மேலும் நியூஸிலாந்து அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர் ஆடம் மில்னவும் ஆர்சிபி அணியில் இருக்கிறார்.

SCROLL FOR NEXT