விளையாட்டு

கோலியின் காயமடைந்த வலது தோள்பட்டைக்கு ஸ்கேன் பரிசோதனை

ஏஎஃப்பி

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி வலது தோளில் காயமேற்பட்டது, இந்நிலையில் காயத்தின் தீவிரத்தை பரிசோதிக்க அவருக்கு ஸ்கேன் செய்யப்படவுள்ளதாக இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோலியின் காயம் குறித்து பீல்டிங் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஸ்ரீதர் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோலியின் காயம் எந்த அளவுக்கு தீவிரம் என்பது நாளை காலை தெரியவரும், இன்று அவருக்கு அடிப்பட்ட தோள்பட்டையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இன்று எச்சரிக்கையின் அடிப்படையிலேயே அவர் காயத்திற்குப் பிறகு களமிறங்கவில்லை.

அது ஒரு தீவிரமான விரட்டலாகும். அவர் பவுண்டரியைத் தடுக்க நிறைய தூரம் வேகமாக ஓடினார். பந்தை நிறுத்தி ஒருரன்னை குறைத்தார், ஆனால் டைவ் அடிக்கும் போது வலது தோளில் அதிர்வு ஏற்பட்டது. அவர் விழுந்த விதம் வலது தோள்பட்டையில் தாக்கம் கொஞ்சம் அதிகம்தான், எனவே ஸ்கேன் செய்யப்படுகிறது.

இவ்வாறு கூறினார். இன்று 40 ஓவருக்குப் பிறகு அஜிங்கிய ரஹானேதான் கேப்டன்சி செய்தார்.

SCROLL FOR NEXT