ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடர் ஆடவர் பிரிவு 400 மீட்டர் ஓட்டத்துக்கு இந்திய வீரர் மொகமது அனாஸ் தகுதி பெற்றுள்ளார்.
போலந்து அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்துக்கான தேசிய சாதனையை முறியடித்த மொகமது அனாஸ் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இதே பிரிவில் தகுதி பெற்றார்.
போலிஷ் ஓட்டப்பந்தயத்தில் 21 வயது மொகமது அனாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 45.40 விநாடிகளில் இலக்கை எட்டினார், இது ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான சரியான கால அளவாகும். தடகளத்தில் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறும் 21-வது இந்திய வீரரானார் மொகமது அனாஸ்.
இவர் தனது தேசிய சாதனையான 45.44 விநாடிகள் என்பதை முறியடித்தார். அதாவது இதே போட்டித் தொடரின் முதல் நாளன்று கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சாதனையை படைத்த அனாஸ், இன்று முறியடித்தார்.