விளையாட்டு

ஒலிம்பிக் வீரர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்

பிடிஐ

ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.

ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை ரியோ நகரில் நடக்கிறது. இந்தியாவின் சார்பில் இதில் கலந்துகொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா வின் சார்பில் இந்த முறைதான் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகமான பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில் ஒலிம்பிக் கில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனை களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். புதுடெல்லி யில் உள்ள மானெக்‌ஷா மையத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது.

SCROLL FOR NEXT