இந்திய அணியின் விராட் கோலி தனது ஆட்ட நேர்த்தியின் மூலம் தனக்கு சச்சின் டெண்டுல்கரை நினைவூட்டுவதாக, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வேகப் பந்துவீச்சாளருமான ஆலன் டொனால்ட் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், பொறுப்புடன் விளையாடிய கோலி சதமடித்து, அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் டொனால்ட், கோலியின் ஆட்டம் என்றவுடன் பொறுப்பு என்ற வார்த்தைதான் தனது மனதில் தோன்றுகிறது என்றும், இங்கு 1996-ல் சச்சின் வெளிப்படுத்திய ஆட்டத்தையே அவர் நினைவுபடுத்தினார் என்றும் கூறினார்.
கோலியின் ஆட்டம் மிக நேர்த்தியாகவும் பொறுப்புணர்வுடன் உள்ளதாக டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு தனக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.