விளையாட்டு

மே 26-ல் அலைச்சறுக்கு போட்டி

செய்திப்பிரிவு

2-வது இந்திய ஓபன் அலைச்சறுக்கு போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சசிஹித்லு கடற்கரையில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய அலைச்சறுக்கு கூட்ட மைப்புடன் இணைந்து இந்த போட் டியை சென்னையை சேர்ந்த லாஜிஸ் டிக்ஸ் மேனேஜ்மேன்ட் நிறுவன மான டிடி குழுமம் நடத்துகிறது. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நோவிஸ் பிரிவு (14 வயதுக்கு உட்பட்டோர்), இந்தியன் குரோம்ஸ் (16 வயதுக்கு உட்பட்டோர்), இந்தியன் ஜூனியர்ஸ் (17 முதல் 22 வயதுக்கு உட்பட்டோர்), இந்தியன் சீனியர்ஸ் (22 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்), இந்தியன் மாஸ்டர் (30 வயதுக்கு மேற்பட்டவர்கள்), ஓபன் பிரிவு (இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர்), ஸ்டேன்ட் அப் பேட்லிங் (ஆடவர், மகளிர்) ஆகிய பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT