டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் தொடரில் 5-வது நாளான நேற்று நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கோபிநாத் 43 ரன்களையும், சதீஷ் 46 ரன்களையும் எடுத்தனர். காரைக்குடி அணியின் பந்துவீச்சாளரான சோனு யாதவ் 27 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆடிய காரைக்குடி காளை அணி 17.1 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் விஜய்குமார் 46 ரன்களையும், னிவாசன் 38 ரன்களையும் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஆண்டணி தாஸ் 4 விக்கெட்களையும், அலெக் சாண்டர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.