விளையாட்டு

சந்தீப் தோமர் தோல்வி

செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சந்தீப் தோமர் தோல்வி கண்டார். முதல் சுற்றில் ரஷியாவின் விக்டர் லெபிடேவ் 7-3 என்ற புள்ளிகள் கணக்கில் சந்தீப் தோமரை தோற்கடித்தார். பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் விக்டர் 1-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானின் ஹசன் ரஹிமிடம் தோல்வி கண்டார். இதனால் வெண்கலப் பதக்கம் வெல்லும் ரெபிசேஜ் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்த சந்தீப் தோமர் வெறுங்கையுடன் வெளியேறினார்.

SCROLL FOR NEXT