இந்திய அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து லெவன் அணி 78 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
நியூஸிலாந்தின் வான் கேரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸி. லெவன் அணியில் அதிகபட்சமாக ஆர்.ஆர்.டானெல் 80, ஜே.டி.ஹிக்கி 45 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ஈஷ்வர் பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட் செய்த இந்திய அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 19, தவண் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.