இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை மும்பையிலிருந்து வங்கதேசம் புறப்பட்டு சென்றது. இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 21-ம் தேதி மிர்பூரில் நடைபெறுகிறது.அதற்கு முன்னதாக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி, 17-ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கையையும், 19-ம் தேதி நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தையும் சந்திக்கிறது.
அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோஹித் சர்மா, வருண் ஆரோன். -பிடிஐ