விளையாட்டு

புரோ கபடி லீக் தொடர்: ‘தமிழ் தலைவாஸ்’ பெயரில் களமிறங்குகிறது தமிழக அணி

பிடிஐ

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளது.

இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

தீவிரப் பயிற்சி

இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நிறைவு பெற்றது. மொத்தம் ரூ.46.99 கோடிக்கு 227 வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக அணியின் இணை உரிமை யாளராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

தமிழக அணி பாஸ்கரன் தலை மையில் சென்னையில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரு கிறது. இந்த அணியில் அதிகபட்ச மாக ரூ.63 லட்சத்துக்கு அமித் ஹூடா ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இவருடன் நட்சத்திர வீரரான அஜெய் தாக்குர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருணும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் தமிழக அணிக்கு ‘தமிழ் தலைவாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சச்சின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித் துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘புரோ கபடி லீக் தொடரின் மற்றொரு கூடுதல் சக்தியாக எங்கள் அணியின் பெயரை ( ‘தமிழ் தலை வாஸ்’) அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். இந்த சீசன் போட் டிகள் வியக்கத்தக்க வகையில் அமையும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT