காமன்வெல்த் போட்டியின் 10 மீ. ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்தியாவின் ககன் நரங் தகுதிபெறவில்லை. இவர் லண்டன் ஒலிம்பிக்கில் இதே 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.
2010 காமன்வெல்த் போட்டியில் 4 தங்கப்பதக்கங்கள் வென்றவரான ககன் நரங், 10 மீ. ரைபிள் தவிர, எஞ்சிய இரு பிரிவு போட்டிகளிலும் பங்கேற்பார். அதேநேரத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய்குமார் ஆகியோர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.