பத்திரிகை அட்டைப்படம் ஒன்றில் கிரிக்கெட் வீர்ர் தோனி விஷ்ணு போல் காட்டப்பட்டதால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்று அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் அந்தப் பத்திரிகை எடிட்டர் மீது தொடரப்பட்ட குற்ற வழக்கையும் நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
அதாவது அவர்கள் தீய நோக்கத்துடன் மத உணர்வுகளை புண்படுத்தியதாகத் தெரியவில்லை, எனவே இந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சாந்தன்கவுடர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தோனி மற்றும் பத்திரிகை எடிட்டரை விசாரணைக்குட்படுத்தினால் அது “நீதியைக் கேலிக்குரியதாக்கி விடும்” என்று கூறி தள்ளுபடி செய்தனர்.