விளையாட்டு

6 நாடுகள் ஹாக்கி போட்டி: இந்திய அணிக்கு சர்தார் சிங் கேப்டன்

பிடிஐ

6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கிப் போட்டியில் விளை யாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாகவும், கோல் கீப்பர் ஜேஷ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் வெலன்சியா நகரில் வரும் ஜூன் 27-ம் தேதி முதல் 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இந்தியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நியூஸிலாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. ஜூன் 27-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில் இந்திய அணி, 6 நாடுகள் தொடரில் கலந்துகொள்வதால் அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அணி விவரம்:

கோல் கீப்பர்கள்:

பி.ஆர்.ஸ்ரீஜேஷ், விகேஷ் தாஹியா.

பின்களம்:

ரூபிந்தர் பால் சிங், வி.ஆர்.ரகுநாத், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், ஹர்மான்பிரீத் சிங், பைரேந்திர லகரா.

நடுகளம்:

டேனிஸ் முஜ்தபா, சிங்லென்சனா சிங், மன்பிரீத் சிங், சர்தார் சிங், எஸ்கே உத்தப்பா, தேவிந்தர், சுனில் வால்மீகி, ஹர்ஜீத் சிங்.

முன்களம்:

தல்விந்தர் சிங், எஸ்.வி.சுனில், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், நிகின் திம்மையா.

கேப்டன் சர்தார் சிங் கூறும் போது, “சாம்பியன்ஸ் டிராபியில் முதல் பதக்கத்தை வென்றுள்ள தால் 6 நாடுகள் ஹாக்கி தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான படிகற்களாக இருக்கும்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கையாண்ட யுக்திகள் ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்று வதற்கான வாய்ப்பை அதிகரித் துள்ளது. 6 நாடுகள் ஹாக்கி தொடரில் கலந்துகொண்டுள்ள அணிகளில் மூன்று, ஒலிம்பிக்கில் நாங்கள் இடம் பெற்றுள்ள பிரிவில் உள்ளன. இதனால் இந்த தொடர் எங்களை மதிப்பிடவும், யுத்தி களை ஆராயவும் சிறந்த முறை யில் உதவும்’’ என்றார்.

தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கூறும்போது, “இந்திய அணியின் சமீபத்திய செயல்பாட்டால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். பயிற்சியில் கற்றதை களத்தில் செயல்படுத்துவதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதே உத்வேகத்துடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT