தமிழகத்தைச் சேர்ந்த இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.
தற்போது இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான அஸ்வின், ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தச் சிறப்பைப் பெற்றார்.
வங்கதேசத்தின் பதுல்லாவில் நடைபெற்று வரும் போட்டியில், இலங்கையின் திரிமன்னே மற்றும் பெரேரா ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
பெரேரா வீழ்த்தியது, இவரது 100-வது விக்கெட்டாக அமைந்தது. இது அஸ்வினின் 77-வது ஒருநாள் போட்டியாகும்.