19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வரும் 15ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று இந்திய கேப்டன் விஜய் சூல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரசு எமிரேட்ஸில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போது நடைபெறுவது 10-வது உலகக் கோப்பை போட்டியாகும். இதில் 2000, 2008, 2012-ம் ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இதேபோல ஆஸ்திரேலிய அணியும் 1988, 2002, 2010-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.