தோனி ஓய்வு பெற்று விட்டார் எனும்போதுதான், அவர் இல்லாதது குறித்து நாம் அதிகம் உணர்வோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவன நேரகாணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் நமது பெரிய வீரர்களை விரைவில் வெளியேற்றவே விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த பங்களிப்பை வைத்து அவரது விருப்பத்தை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். கேப்டனாக வேண்டும் என்று பெரிய அவசரம் காட்டுவதாக நான் கருதவில்லை. காலம் வரும். நான் கூறுவதை நம்புங்கள், தோனி ஓய்வு பெற்றுவிட்டால் அவர் இல்லை என்பதை நான் ஒரு பெரிய இழப்பாகவே உணர்வோம், குறிப்பாக இந்தியாவில்.
விராட் கோலி அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாகப் போவது உறுதி. இந்தியா உற்பத்தி செய்த மிகப்பெரிய வீர்ராக தோனி தனது கரியரை முடிப்பார், நேர்மையாகக் கூற வேண்டுமென்றால் கோலியை முழுதும் கேப்டனாக அவசரம் தேவையில்லை.
விராட் கோலி தனது வாழ்க்கயின் சிறந்த காலக்கட்டத்தில் இருக்கிறார். அவர் விளையாடும் விதம் அபூர்வமானது. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார், நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். இந்தியாவின் இளைஞர் என்பதற்கு சிறந்த உதாரணமாக கோலி திகழ்கிறார். தன்னை ஒரு தடகள வீரராகவே அவர் வழங்கிக் கொள்கிறார். அவர் விளையாடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அவர் புத்துணர்வு ஊட்டுபவராக இருக்கிறார். அவர் ஒரு சிறந்த ஆளுமையாகவும் உருவாகி வருகிறார். அவர் மட்டையைக் கையில் கொண்டு இறங்கும் போது என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆர்வம் எழுகிறது. அவர் மிகவும் நிதானமானவராக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு உலகின் தலைசிறந்த வீரர் கோலிதான்.
இது பெரிய விஷயம் ஏனெனில், ஏ.பி.டிவில்லியர்ஸ் இருக்கிறார், அவரைக் கடந்து விடுவது எளிதல்ல. ஆனால் கடந்த ஆண்டு டிவில்லியர்ஸையும் கடந்து விட்டார் கோலி. கோலி பேட் செய்வதைப் பார்ப்பது நமக்குக் கிடைக்கும் மரியாதை.
பயிற்சியாளர் போட்டியில் நான் இல்லை. அணிகள் கேப்டன்களாலேயே நடத்தப்படுவதாக நினைப்பவன் நான், இந்திய அணியைப் பொறுத்தவரை தோனி, கோலி என்று நல்ல தலைமைகள் உள்ளன. எனவே யார் பயிற்சியாளராக வந்தாலும் அவர் நல்ல விதத்திலேயே பணியாற்றுவார்.
இவ்வாறு கூறினார் டீன் ஜோன்ஸ்.