விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி: மழை காரணமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆட்டம் ரத்து

ஐஏஎன்எஸ்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையின் ’ஏ’ பிரிவில் இடப்பெற்றுள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் கப்தில், ரோஞ்ச் களமிறங்கினர். 6 ஓவருக்கு 40 ரன்கள் சேர்ந்த நிலையில் 26 ரன்னில் கப்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ரோஞ்சுடன் இணைந்து நிதனாமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 46 ஓவருக்கு என ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ரோஞ்ச் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் சதம்

சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் சதம் அடித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ரோஸ் டைய்லர் தன் பங்கிற்கு 46 ரன்கள் சேர்த்தார். முடிவில் 45 ஓவருக்கு 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில், ஜோஷ் ஹாசில்வுட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆட்டதுக்குகிடையே மழை மீண்டும் குறுக்கிட்டது இதனால் ஓவர் 33-ஆக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டு 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடுகளத்தின் தன்மையை ஆரய்ந்த நடுவர்கள் போட்டியை இனி தொடர முடியாததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT