விளையாட்டு

மாநில பல்கலை. ஹாக்கி: இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், கற்பகம் பல்கலைக்கழகம், காருண்யா பல்கலைக்கழகம், கலசலிங்கம் பல்கலைக்கழகம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் பிற்பகல் 2.30 மணியில் இருந்து தொடங்குகின்றன. 2-வது நாளான செவ்வாய்க்கிழமை காலையில் 6.30 மணி முதல் 8.30 மணி வரை இரு போட்டிகளும், பிற்பகல் 2.30 மணியில் இருந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணியில் இடம்பெறும் அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரமும், 2-வது இடம்பிடிக்கும் அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 3-வது இடம்பிடிக்கும் அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு தலா ரூ.1000-மும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

SCROLL FOR NEXT