கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கூறியது: சச்சின் ஐபிஎல் போட்டியில் ஏலம் விடப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் எப்படி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் என்று கூற முடியும். எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது தவறுதான் என்றார் உமா பாரதி.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா சமீபத்தில் சச்சினுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரரும் அவர்தான்.