விளையாட்டு

மரணத்தில் முடிந்த கால்பந்து வீரரின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

ஐஏஎன்எஸ்

மிஜோரம் கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா தான் அடித்த கோலைக் கொண்டாட குட்டிக்கரணங்கள் அடித்தார். இது அவரது மரணத்தில் போய் முடிந்துள்ளது.

பீட்டர் பியக்சாங்சுலா தனது அணிக்கு சமன் கொடுத்த தனது கோலைக் கொண்டாடினார். குட்டிக்கரணங்கள் அடித்தார், இதில் அவரது முதுகுத் தண்டு கடும் சேதமடைந்தது.

வலியில் துடித்த அவரை ஐஸ்வால் சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் எந்த வித சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் உயிர் நேற்று பிரிந்தது. இவருக்கு வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது.

மிஜோரம் பிரிமியர் லீக் போட்டியில் பெத்லஹம் வெந்த்லாங் கால்பந்து கிளப்பிற்காக ஆடிய பீட்டர், தன் அணிக்காக முதல் கோலை அடித்து சமன் செய்தார். அந்த மகிழ்ச்சித் திளைப்பில் மைதானத்தில் குட்டிக்கரணங்கள் அடித்தார். அப்போது தலை நேராக தரையில் மோத அவர் மைதானத்தில் வலியால் துடிதுடித்தார்.

இதில் அவரது தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

சன்மாரி வெஸ்ட் அணிக்கு எதிராக இந்த சமன் கோலை அவர் அடித்து, மகிழ்ச்சியில் கொண்டாட்டம் போட்டு அடிபட்டு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அவரது அணியோ 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியே தழுவியது.

பீட்டரின் மரணத்தினால் மிஜோரம் கால்பந்து வீர்ர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்,

SCROLL FOR NEXT