ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
ஆனால் மற்றொரு ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தோற்று வெளியேறினார். 3 அரையிறுதிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிக்குத் தகுதி பெறுவார்கள்.
உசைன் போல்ட் அனாயசமாக முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார், அதாவது 19.78 விநாடிகளில் 200 மீ இலக்கை கடந்தார் உசைன் போல்ட், இவருக்கு அடுத்தபடியாக நெருக்கமாக வந்த கனடாவின் டி கிராஸ் 19.80 விநாடிகளில் 2-ம் இடம் பிடித்தார்.
உசைன் போல்ட் கடைசியில் பேசிக்கொண்டே ஓடி மிகவும் கேஷுவலாக டி கிராஸைப் பார்த்து ஒற்றை விரலை நீட்டி, புன்னகைத்தது சூசகமாக எதையோ அவருக்குத் தெரிவித்தது போல் இருந்தது.