விளையாட்டு

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் மகேஷ் சாதனை

செய்திப்பிரிவு

ஸ்லோவேகியா தலைநகர் பிராடிஸ்லாவில் நடைபெற்ற சர்தேச ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் மகேஷ் மங்கோன்கர்.

மும்பையைச் சேர்ந்த 19-வயது வீரரான மகேஷ். சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ளார்.

பிராடிஸ்லாவில் நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிரேக் லுபானை அவர் தோற்கடித்தார். கடந்த இரு ஆண்டுகளாக இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கிரேக் லுபானை வெல்வது மகேஷுக்கு பெரும் சவாலாக இருந்தது.

SCROLL FOR NEXT