விளையாட்டு

மகளிர் ஹாக்கியில் இந்தியா டிரா

செய்திப்பிரிவு

மகளிர் பிரிவு ஹாக்கியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. 15-வது நிமிடத்தில் ஜப்பான் முதல் கோலை அடித்தது.

அந்த அணியின் நிஷிகோரி எமி, பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார். 31-வது நிமிடத்தில் நாஷிமா கோல் அடிக்க முதல் பாதியில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா முதல் கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை ராணி ராம்பால் கோலாக மாற்றினார். 39-வது நிமிடத்தில் லிலிமா அற்புதமாக கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலை பெற்றது.

அதன் பின்னர் இரு அணிகள் தரப்பிலும் மேலும் கோல் அடிக்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT