இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டில் தெ.ஆப்பிரிக்கா 244 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகனஸ்பர்க்கில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 280 ரன்களில் ஆட்டமிழந்தது.
பின்னர் ஆட்டத்தை துவக்கிய தெ.ஆப்பிரிக்கா அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
குறிப்பாக ஜாகிர் கான், இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 244 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணியை ஆட்டமிழக்கச் செய்தனர். பீட்டர்சன், அம்லா, காலிஸ் என 3 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இஷாந்த் சர்மா கைப்பற்றியது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்த்தது.
பவுலர்கள் திறமையால், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 36 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் இந்திய அணி, 2-வது இன்னிங்சை தொடங்கியது.