அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டிவென்டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு நேபாளம் தகுதி பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளம் வென்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டி ஒன்றுக்கு முதல்முறையாக தகுதி பெற்று நேபாளம் சாதனை படைத்தது.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் டி20 உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
வங்கதேசத்தில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை 5-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. டாப் 10 அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. தகுதிசுற்று மூலம் மேலும் 6 அணிகள் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுகின்றன.
டிவென்டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.