விளையாட்டு

ஏடிபி உலக டூர் பைனல்ஸ்: நடாலை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

செய்திப்பிரிவு

லண்டனில் நடைபெற்று வந்த ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் ரஃபெல் நடாலை 6-3,6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 36 நிமிடங்கள் நீடித்தது. சர்வதேச தரவரிசையில் ஜோகோவிச் 2-வது இடத்தில் உள்ளார்.

இந்த வெற்றி மூலம் ஏடிபி உலக டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த வெற்றி மூலம் ரூ.12.16 கோடியை ஜோகோவிச் வென்றார். நடாலுக்கு ரூ6.40 கோடி கிடைத்தது.

முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வென்றார். ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை வீழ்த்தினார்.

ஆடவர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டாஸ்கோ, டேவிட் மாரிரோ ஜோடி, அமெரிக்க இரட்டையர்களான் பாப், மைக் பிரையரை 7-5, 6-7,10,7 என்ற செட்களில் வென்றது. இதில் வெற்றி பெற்ற ஜோடி தரவரிசையில் 6-வது இடத்திலும், தோல்வியடைந்த ஜோடி தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT