பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் நடைபெற்ற ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்தின் ஆன்டல் வான் டெர் டுயிம் சாம்பியன் பட்டம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் வான் டெர் டுயிம் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் விஷ்ணுவர்தனை தோற்கடித்து சாம்பியன் ஆனார். கடந்த 20 மாதங்களுக்கு முன்பு ஐடிஎஃப் போட்டியில் பட்டம் வென்ற விஷ்ணுவர்தன், அதன்பிறகு பட்டம் வெல்லவில்லை. சண்டீகர் போட்டியில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் தோல்வி கண்டு பட்டத்தை நழுவவிட்டார்.
பட்டம் வென்ற டுயிமுக்கு 18 ரேங்கிங் புள்ளிகளும், விஷ்ணுவுக்கு 10 ரேங்கிங் புள்ளிகளும் கிடைத்தன.