விளையாட்டு

இந்திய வீரர்கள் 21 பேரிடம் “சேம்பிள்” சேகரித்தது “வாடா”

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு மையத்தில் (என்.ஐ.எஸ்.) பயிற்சி முகாமில் இருந்த 21 பளுதூக்குதல் வீரர்களிடம் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு ரத்த மாதிரிகளை (சேம்பிள்) சேகரித்துச் சென்றுள்ளது.

வாடா குழு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இங்கு வந்து மாதிரியை சேகரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய பளுதூக்குதல் சம்மேள துணைத் தலைவர் சக்தேவ் யாதவ் கூறுகையில், “பளுதூக்குதல் பயிற்சி முகாமுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வந்த ஹங்கேரி மருத்துவர்கள் குழு, ஜூனியர் வீரர்கள் உள்ளிட்ட 21 பேரிடம் மாதிரியை சேகரித்துள்ளது. 5 வீரர்கள் விடுப்பில் இருந்ததால் அவர்களின் மாதிரியை சேகரிக்கவில்லை” என்றார்.

இதுதொடர்பாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு “வாடா” முன்னரே தகவல் தெரிவித்ததா என்று கேட்டபோது, “வாடா குழுவினர் இங்கு வந்து திடீரென மாதிரிகளை எடுத்துச் செல்வது இது முதல்முறையல்ல. அவர்கள் இந்தமுறையும் எங்களிடம் சொல்லாமலேயே இங்கு வந்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT