அர்ஜெண்டீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் முன்னாள் கால்பந்து வீரர் டீகோ மரடோனா தனது முன்னாள் பெண் தோழியை தாக்கிய காட்சி இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ரோசியோ ஆலிவா என்ற அந்த 24 வயது பெண், மரடோனாவுடனான தனது உரையாடலை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால் எரிச்சலடைந்ததாகக் கூறப்படும் டீகோ மரடோனா அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘நான் அந்தப் பெண்ணுக்கு எதிராக கையை உயர்த்தவில்லை’ என்று மரடோனா மறுத்த சில மணி நேரங்களில் அர்ஜெண்டீன தொலைக்காட்சியில் அந்தக் காட்சி ஒளிபரப்பப் பட்டது.
தனது முன்னாள் தோழியின் செல்போனைத் தான் தட்டி விட்டது உண்மை என்று மரடோனா ஒப்புக் கொண்டாலும் அவரைத் தாக்கவில்லை என்று கூறிவந்தார்.
ஆனால் தற்போது அந்த வீடியோ ஒளிபரப்பாகியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால் ரோசோயோ ஆலிவா இதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று சர்ச்சையை இப்போதைக்கு முடித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.