விளையாட்டு

ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் தகுதி: ஐசிசி அறிவிப்பு

ஏஎஃப்பி

நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன.

இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வியாழனன்று ஐசிசி வாரியம் அதன் இன்றைய கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கையெழுத்தை இட்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்தக் கோரிக்கை வியாழனன்று வாக்களிப்புக்கு விடப்பட்டது, அனைவரும் டெஸ்ட் தகுதியளிக்க ஏகமனதாக ஆதரவளித்தனர்.

SCROLL FOR NEXT