விளையாட்டு

டெஸ்ட் அந்தஸ்து பெற்றன அயர்லாந்து, ஆப்கன் அணிகள்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்தை ஐசிசி வழங்கி உள்ளது. இதற்கான அனுமதியை லண்டனில் நடைபெற்று வரும் வருடாந்திர மாநாட்டில் ஐசிசி வழங்கி உள்ளது. இதன் மூலம் இந்த இரு அணிகளும் சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆப்கானிஸ்தான், அய்லாந்து அணிகளுக்கு முழு நேர உறுப்பி னர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. ஐசிசி முழு நேர உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமன தாக எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT