கோவா - பெங்களூரு அணிகளிடையேயான புட்சால் கால்பந்து போட்டி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கோவா அணி 7-2 என்ற கோல்கணக்கில் பெங்களூருவை வென்றது.
இப்போட்டியில் கோவாவின் முன்னணி வீரரான ரொனால்டினோ 5 கோல்களை அடித்து அசத்தினார். அந்த அணியில் ரபேல், மார்ஷல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பெங்களூரு அணியில் மேக்ஸி, ஜொனாதன் ஆகியோர் கோல் அடித்தனர்.